குளியலறையில் மயங்கி விழுந்து உரக்கடை உரிமையாளர் பலி

 

கோபி, ஜூலை 22: கோபி அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் குளியலறையில் மயங்கி விழுந்து உரக்கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோபி அருகே உள்ள கரட்டடிபாளையம் கொல்லங்காடு வீதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி மகன் விக்ரம் (25). இவர் காலேஜ் பிரிவில் உரக்கடை நடத்தி வந்தார். நேற்று காலை வீட்டில் இருந்த குளியலறையில் குளிக்க சென்ற விக்ரம் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.

அதைத்தொடர்ந்து குறியலறை கதவை தள்ளி திறந்து பார்த்த போது விக்ரம் மயங்கிய நிலையில் கிடந்தார். அதைத்தொடர்ந்து அவரை மீட்ட அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே விக்ரம் உயிரிழந்தார். இதுகுறித்து விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் கடத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குளியலறையில் மயங்கி விழுந்து உரக்கடை உரிமையாளர் பலி appeared first on Dinakaran.

Related Stories: