பொன்னமராவதி அண்ணா சாலையில் பள்ளங்களில் மழைநீர் தேக்கம்: வானக ஓட்டிகள் அவதி

 

பொன்னமராவதி, ஜூன் 14: பொன்னமராவதி அண்ணா சாலையில் சிறிது மழை பெய்தால் கூட தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் முக்கிய சாலையாக அண்ணாசாலை உள்ளது. இந்த சாலை காவேரி குடிநீர் பதிப்பதற்காக தோண்டப்பட்டு, பின்னர் நீண்ட நாட்களுக்கு பெயரளவில் சாலை போடப்பட்டது. இந்த சாலை குண்டும் குழியுமாக கிடக்கிறது. இந்நிலையில், நேற்று மாலை பொன்னமராவதியில் சிறிது மழை பெய்தது. இந்த மழை நீர் இந்த சாலையில் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் வண்டிகளை ஓட்டிச்சென்றனர்.

புதுவளைவு பகுதியில் மழை நீர் தேங்கிய இடத்தில் சாலையின் மையப்பகுதியில் குழியாகவும் கிடக்கின்றது. இதனால், விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. வெள்ளையாண்டிபட்டி விளக்கில் இருந்து புதுவளைவு, சேங்கை ஊரணி, அண்ணாசாலை, யூனியன் ஆபீஸ் வரை போக்குவரத்து இடையூறு இன்றி சென்று வர இந்த சாலையினை புதிதாக தரமான சாலையாக போட்டு மழைநீர் தேங்காமலும் போக்குவரத்து இடையூறு இன்றி வாகன ஓட்டிகள் சென்று வரவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பொன்னமராவதி அண்ணா சாலையில் பள்ளங்களில் மழைநீர் தேக்கம்: வானக ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: