வேலூர், ஜூலை 25: வாலாஜா அருகே விபத்தில் மூளைச் சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.பெங்களூரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகன் சதீஷ் (23). இவர் ஐடிஐ படித்துவிட்டு சிஎம்சி மருத்துவமனையில் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 22ம் தேதி வாலாஜா டோல்கேட் அருகே நடந்த பைக் விபத்தில் சதீஷ் படுகாயம் அடைந்தார். இதையடுத்து ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அவர் மூளை சாவு அடைந்தார். அதை டாக்டர்கள் குழுவினர் உறுதி செய்தனர். தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர். பின்னர் அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. அதன்படி கல்லீரல் ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனைக்கும், 2 கிட்னிகள் ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனைக்கும், கண்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கும் தானமாக பெறப்பட்டது.
The post மூளைச் சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் appeared first on Dinakaran.
