நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் சிறை

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அந்த மாணவிக்கு கல்லூரி முதல்வர் செந்தில்குமார் (53) பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த 2022ல் கரூர் மாவட்டம் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இது தொடர்பாக போலீசார், செந்தில்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு கரூர் கூடுதல் அமர்வு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேல், குற்றம்சாட்டப்பட்ட செந்தில்குமாருக்கு போக்சோ சட்டத்திற்காக 23 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000ம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.7 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

The post நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.

Related Stories: