மதுரை / வாடிப்பட்டி : மதுரை மாநகராட்சியில் 718 இடங்களில் புதிய தார்சாலை அமைப்பத்றகான பூமிபூஜை மற்றும் ஆலாத்தூரில் பொதுமக்களுக்க மின்னணு குடும்ப அட்டை வழங்கும் விழா அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி சோலை அழகுபுரம் பகுதி, மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜெய்ஹிந்துபுரம் 2வது மெயின் ரோடு பகுதிகளில் 326 இடங்களில் புதிய தார்சாலைகள், பேவர் பிளாக், கான்கிரிட் சாலைகள் 38.01 கி.மீ நீளத்திற்கு ரூ.2375.20 லட்சம் மதிப்பீட்டில் அமைகிறது.
இதேபோல், மதுரை பகத்சிங் தெரு, துரைச்சாமி நகர் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில்124 எண்ணிக்கையில் புதிய தார்சாலைகள், கான்கீரிட் சாலைகள் என 21.81 கி.மீ நீளத்திற்கு ரூ.1441.15 லட்சம் மதிப்பீட்டில் அமைகிறது.
மேலும், சம்மட்டிபுரம் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 265 சாலைகள் 29.25 கி.மீ தூரத்திற்கு ரூ.2737.23 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை, கான்கிரிட் சாலைகள் அமைகிறது. இதன்படி மொத்தம் 718 சாலைகள் 89.07 கி.மீ நீளத்திற்கு ரூ.6553.58 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலைப்பணிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று பூமிபூஜை நடத்தி தொடங்கி வைத்தார்.
மேலும், விராட்டிபத்து பகுதியில் புதிய கவுன்சிலர் அலுவலகம், வார்டு 65ல் கவுன்சிலர் அலுவலக புதிய கண்காணிப்பு கேமிரா, வார்டு 74ல் புதிய தார்சாலை ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார்.
தூய்மை பாரத இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.9.74 கோடியில் கோச்சடை பகுதியில் நாள்தோறும் 200 மெட்ரிக் டன் திறன் கொண்ட நவீன குப்பை பரிமாற்ற நிலையத்தின் கட்டுமான பணிகளுக்கும் அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சிகளில் கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர்கள் சுவிதா, பாண்டிச்செல்வி, சரவண புவனேஸ்வரி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தனசெல்வம், இளைஞர் அணி மாநில துணை செயலாளர் ஜி.பி.ராஜா, பகுதிச் செயலாளர்கள் சசிக்குமார், காவேரி, தவமணி, சுதன், மதி வெங்கடேஷ், அன்பழகன் உள்ளிட்ட திரளான திமுக நிர்வாகிகள், பொதுமக்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
அடுத்ததாக, ஆலாத்தூரில் மாவட்ட வழங்கல் துறை சார்பாக பொதுமக்களுக்கு புதிய மின்ன1ணு குடும்ப அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு அமைச்சர் பி.மூர்த்தி தலைமை வகித்து 8 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 1016 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.
விழாவில் அவர் பேசும்போது, ‘‘எல்லோருக்கும் எல்லாம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு திராவிட மாடல் ஆட்சி நடத்தும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறார்.
பல்வேறு நலத்திட்டங்களுக்கு குடும்ப அட்டை அவசியம். அதனை முறைப்படி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என, முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இந்நிகழ்வு நடக்கிறது. தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம்’’ என்றார். இவ்விழாவில் கலெக்டர் சங்கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன், மாவட்ட வழங்கல் அலுவலர் முத்து முருகேச பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
The post ஆலாத்தூரில் மின்னணு குடும்ப அட்டை வழங்கல் மாநகராட்சியின் 718 இடங்களில் சாலை பணிகளுக்கான பூமிபூஜை appeared first on Dinakaran.