பாம்பன் தூக்கு பாலம் அருகே விசைப்படகு கடலில் கவிழ்ந்து விபத்து: 6 பேர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்

ராமநாதபுரம்: பாம்பன் தூக்கு பாலம் அருகே விசைப்படகு விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது. மீன்பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவு நிறைவடைய உள்ளது. இதனை அடுத்து நாளை மறுநாள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் பாம்பன் தெற்கு பகுதியில் மண்டபம் பகுதி மீனவர்கள் படகில் மராமத்து செய்து சொந்த இடமான மண்டபத்திற்கு எடுத்து செல்வதற்காக இன்று காலை 9.30 மணி அளவில் மண்டபம் தெற்கு கடற்கரையிலிருந்து வடக்கு கடற்கரைக்கு செல்வதற்காக பாம்பன் தூக்கு பாலம் வழியாக சென்றனர்.

ஆனால் பாம்பன் தூக்கு பாலம் தூக்காத நிலையில் படகின் எடையை குறைப்பதற்காக பெரிய கேன்களில் தண்ணீரை நிரப்பி படகின் உயரத்தை குறைப்பதற்காக தண்ணீரை நிரப்பி உள்ளனர். அச்சமயத்தில் காற்றின் வேகம் அதிகரித்ததால் படகில் உள்ள கேன்களில் உள்ள தண்ணீர் படகினுள் விழுந்து படகு மூழ்கியது. படகு மூழ்கிய நிலையில் படகில் இருந்த 6 மீனவர்களை அகம் மீனவர்கள் உடனடியாக மீட்டனர். மூழ்கிய படகையே மீனவர்களின் பாதுகாப்பாக காப்பதற்காக சக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் படகை மீட்கும் பணிகளிலும் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

The post பாம்பன் தூக்கு பாலம் அருகே விசைப்படகு கடலில் கவிழ்ந்து விபத்து: 6 பேர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர் appeared first on Dinakaran.

Related Stories: