கட்டப் பஞ்சாயத்து: செங்குன்றத்தில் பா.ஜ.க. மாநில நிர்வாகி கைது

சென்னை: செங்குன்றத்தில் பிரபல ரவுடி மிளகாய் பொடி வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, மோசடி என்று பல்வேறு குற்றப் பின்னணி கொண்டவர்கள் கடந்த சில மாதங்களாகவே பாஜகவில் இணைந்து வந்தனர். போலீஸ் அதிகாரியாக சிறப்பாக பணியாற்றியதாக கூறும் அண்ணாமலைதான் இந்த குற்றவாளிகளை எல்லாம் கட்சியில் சேர்த்து பொறுப்புகளை வழங்கியுள்ளார். அதில் முக்கியமானவர் மிளகாய் பொடி வெங்கடேசன்(எ) கே.ஆர்.வெங்கடேஷ். இவர், தமிழக பாஜகவில் ஓபிசி பிரிவு தலைவராகவும் உள்ளார்.

இந்தப் பதவிகளை வாங்க அவர் பல கோடிகளை செலவு செய்ததாக கூறப்படுகிறது. வெங்கடேசன் மீது, தற்போது, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் 60 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் ஆந்திரா, தெலங்கானாவில் செம்மரக்கட்டைகள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆந்திரா போலீசாரால் பல முறை கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார். ல மாதங்களுக்கு முன்னர் ஆவடி போலீசாரால் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.

இவர் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் சென்னை செங்குன்றத்தில் பிரபல ரவுடி மிளகாய் பொடி வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் வைத்து மிளகாய் பொடி வெங்கடேசனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கட்டப் பஞ்சாயத்து: செங்குன்றத்தில் பா.ஜ.க. மாநில நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Related Stories: