அகமதாபாத் விமான விபத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி

சென்னை: அகமதாபாத் விமான விபத்து குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். அகமதாபாத் விமான விபத்து குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: 242 பயணிகளுடன் ஏர் இந்தியா AI171 விமானம் அகமதாபாத்தில் கோரமாக விபத்துக்குள்ளானது அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் குறித்து மிகவும் கவலை கொள்கிறேன். சாத்தியமுள்ள அனைத்து வழிகளிலும் மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post அகமதாபாத் விமான விபத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: