நெடுவாசல் நாடியம்மன் கோயில் தேரோட்டம்

புதுக்கோட்டை, ஜூன் 12: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் நாடியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் நாடியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, கோயிலில் மண்டகபடிதாரர்கள் சார்பில் தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. செவ்வாய்க் கிழமை இரவு தென்னை, பனை ஓலைகளால் படல் அமைத்து, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 65 அடி உயர சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை எழுந்தருளல் செய்து,

குருத்தோலை சப்பரத் தேர் வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று மாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த நாடியம்மனை எழுந்தருளல் செய்து தேரோடும் வீதிகள் வழியே ஏராளமானோர் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். கோயில் திருப்பணி காரணமாக 12 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். வடகாடு போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

The post நெடுவாசல் நாடியம்மன் கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: