சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

குமாரபாளையம், ஜூலை 30: குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் சரவணாதேவி தலைமை தாங்கி பேசினார். கோட்டாச்சியர் சுகந்தி பங்கேற்று, சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து விபத்துகளை தவிர்க்க அறிவுறுத்தினார். சேலம் ரேவதி கலை சங்கத்தினரின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது. நாடகம், கரகாட்டம், வில்லுபாட்டு ஆகியவற்றின் மூலம் சாலை விதிகளை பின்பற்றவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர், சாலை விதிகளை முறைப்படி கடைபிடிக்க மாணவ, மாணவிகள் உறுதியேற்றனர். வருவாய் ஆய்வாளர் புவனேஷ்வரி, கிராம நிர்வாக அதிகாரிகள் செந்தில்குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகள் குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. உதவி பேராசிரியர் ஞானதீபன் நன்றி கூறினார்.

The post சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: