சூதாடிய 5 பேர் கைது

கிருஷ்ணகிரி, ஜூலை 30: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் கே.என்.போரூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பஸ்வேஸ்வரகோயில் பகுதியில் சூதாடிக் கொண்டிருந்த கும்பல், போலீசாரை பார்த்ததும் நாலாப்புறமும் சிதறி ஓட்டம் பிடித்தது. அவர்களை போலீசார் துரத்தி சென்று சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், ஓசூர் கோட்டை மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த கிரிபாபு(45), ஓசூர் ராம் நகர் அரவிந்த்(28), கிருஷ்ணமூர்த்தி(25), தீர்த்தம் பகுதியை சேர்ந்த பசவராஜ் (44), கருக்கன்சாவடியை சேர்ந்த குமார் (47) என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.25 ஆயிரம் ரொக்கம், 16 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.

The post சூதாடிய 5 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: