சேலம், ஜூலை 30: சேலம் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 29 பேருக்கு, குமாரசாமிபட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கடந்த ஜூன் 5ம் தேதி பயிற்சி தொடங்கியது. 45 நாட்களாக நடந்து வந்த பயிற்சி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதையொட்டி நடந்த பயிற்சி நிறைவு விழாவிற்கு மாவட்ட எஸ்பி கௌதம்கோயல் தலைமை வகித்தார். அவர் முன்னிலையில், பயிற்சியை நிறைவு செய்த ஊர்க்காவல் படை வீரர்கள் அணிவகுப்பை நடத்தினர். தொடர்ந்து பயிற்சியில் சிறப்பிடம் பிடித்தவர்களுக்கு எஸ்பி சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் ஊர்க்காவல் படை மண்டல தளபதி தனசேகர், ஆயுதப்படை டிஎஸ்பி இளங்கோவன், மண்டல துணை தளபதி பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post ஊர்க்காவல்படை வீரர்கள் 29 பேருக்கு பயிற்சி நிறைவு appeared first on Dinakaran.
