தாராபுரம், ஜூன் 11: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 5 சாலை சந்திப்பு அருகே தலைமை நூலக கட்டிடம் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து ஏற்கனவே செயல்பட்டு வந்த நூலகத்தை கூடுதலாக 22 லட்சம் மதிப்பீட்டில் 950 சதுர அடி பரப்பளவில் நூலகத்துடன் புதிய இணைப்பு நூலக கட்டிடம் ஒன்றைக் கட்ட தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்தது, அதன் அடிப்படையில் தாராபுரம் புதிய நூலக இணைப்பு கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று காலை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கயல்விழி செல்வராஜ் புதிய நூலக கட்டிடத்தில் குத்து விளக்கு ஏற்றி வைத்து நூலகத்தின் செயல்பாடுகளை துவக்கி வைத்தார்,
நிகழ்ச்சியில், நகர சபை தலைவர் பாப்பு கண்ணன், நகர கழக செயலாளர் முருகானந்தம், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் செல்வராஜ், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற உறுப்பினர்கள், முகமது யூசுப், உமா மகேஸ்வரி, முத்துலட்சுமி, ஷாஜிதா பானு, தர் உட்பட பொதுமக்கள், ஊர் புற நூலக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post தாராபுரத்தில் ரூ.22 லட்சத்தில் நூலகத்துடன் இணைப்பு கட்டிடம் திறப்பு appeared first on Dinakaran.