தஞ்சாவூர், ஜூன் 11: மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் வெறும் வதந்தி என தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வாட்ஸ் ஆப் மற்றும் யூடியூப் செயலிகளின் வாயிலாக பரவிவரும் புகைப்படம் மற்றும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக சிறப்பு முகாம் ஏதும் நடைபெறவில்லை.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கோ, இதர அரசு அலுவலகங்களுக்கோ பொதுமக்கள் யாரும் அலைய வேண்டாம் என்ற விபரம் அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது.மேலும் இத்திட்டம் தொடர்பான அரசாணை வெளியிட்டபிறகு பத்திரிக்கை செய்தி, தொலைக்காட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் விளம்பரப்படுத்தப்படும். அதன் பின்னர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
The post மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் appeared first on Dinakaran.