தேர்தலை குறிவைத்து பாஜ தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் அறிக்கை

சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக வருகையால் ஒட்டுமொத்த கட்சிகளும் அரண்டுபோயிருக்கிறது. மதுபான ஊழலில் திளைத்து பலகோடி ரூபாய் மக்கள் பணத்தை சூறையாடிய டெல்லி முதல்வராக இருந்த கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சிக்கு எப்படி முடிவு கட்டப்பட்டதோ, அதேபோன்று தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் உறுதி என்று சூளூரைத்து இருக்கிறார் அமித்ஷா. அவரது தமிழக வருகையால், பாஜக- அதிமுக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கப் போவது திண்ணம். அறுபடை வீடான திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று சொல்லும் அரசுக்கு, வரும் 22-ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு பதிலடி கொடுக்கும். ஒடிசா, அரியானா, மகாராஷ்டிரா, டெல்லி வழியில் தமிழகத்திலும் பாஜக கூட்டணி வெற்றி வாகை சூடி, ஆட்சியை கைப்பற்றும். அமித் ஷா கூறியபடி, பாஜ தொண்டர்கள் ஒவ்வொருவரும் களப்பணியாற்றுவோம்.

The post தேர்தலை குறிவைத்து பாஜ தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: