சென்னை: அனுமதி பெறாமல் அன்புமணி நடைபயணம் மேற்கொண்டுள்ளதாக உள்துறை செயலருக்கு ராமதாஸ் கடிதம் அனுப்பியுள்ளார். உள்துறை செயலருக்கு ராமதாஸ் அனுப்பிய கடிதத்தில் டிஜிபியின் உத்தரவு நகலும் இணைக்கப்பட்டுள்ளது. உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். அன்புமணி பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ராமதாஸ், அனுமதி தரக்கூடாது என டிஜிபிக்கு மனு அளித்தார்.
The post அனுமதி பெறாமல் அன்புமணி நடைபயணம் மேற்கொண்டுள்ளதாக உள்துறை செயலருக்கு ராமதாஸ் கடிதம் appeared first on Dinakaran.