அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் : எடப்பாடி ஆசை

அரக்கோணம்: அதிமுக தலைமையிலான கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இடம் பெறும் என அரக்கோணத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவியின் மகன் திருமணம் நேற்று நடந்தது. சிறப்பு அழைப்பாளராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், ‘இன்றைய அரசியல் சூழ்நிலையை பொறுத்தவரையில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலே ஒரு கூட்டணி அமைக்கப்பட்டு இருப்பது தெரியும். விரைவாக மேலும் பல கட்சிகள் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெறும். வருகின்ற சட்டமன்ற தேர்தல் உங்களுடைய தேர்தல். அதிமுக ஆட்சி வருகின்ற தேர்தல் ஆகும். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கம் அதிமுக தான்’ என்றார்.

 

The post அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் : எடப்பாடி ஆசை appeared first on Dinakaran.

Related Stories: