ஒன்றிய அரசு மருத்துவர்களுக்கு இணையாக மாநில அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்: அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு கோரிக்கை

சென்னை: அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய அரசு எம்.பி.பி.எஸ் மருத்துவர் 4 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை மாநில அரசு மருத்துவர் 15 ஆண்டுகள் கழித்தும், 9 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை மாநில அரசு மருத்துவ 17 ஆண்டுகள் கழித்தும் 13 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை மாநில அரசு மருத்துவர் 20 ஆண்டுகள் கழித்தும் பெறுகின்ற நிலை நிலவுகிறது. இதன் விளைவாக மத்திய அரசு மருத்துவர் 13 ஆண்டுகள் பெறுகின்ற ஊதியமான ரூ.1,23,000 த்திற்கு பதிலாக மாநில அரசு மருத்துவர் ரூ.86,000 அடிப்படை ஊதியமாக பெறுகின்றர், 14வது ஆண்டு முதல் பணி மூப்பு அடையும் வரை மாதம்தோறும் ரூ.40,000 முதல் ரூ.45,000 வரை மாநில அரசு மருத்துவர் குறைவான அடிப்படை ஊதியம் பெற வேண்டிய நிலை உள்ளது.

எனவே அடிப்படை ஊதிய மாநில அரசு மருத்துவருக்கு வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றிட அரசை வலியுறுத்தி வருகின்ற ஜூன் 11 ம் தேதி சேலம் மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி பாதயாத்திரை செல்ல உள்ளோம். மருத்துவர்கள் தங்களை வருத்திக்கொள்ளும் இந்த நடைபயணத்தின் போது மக்களை சந்தித்து கோரிக்கை குறித்து விளக்குவோம். குறிப்பாக பொது சுகாதாரத் துறையின் கட்டமைப்பை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்து பேசுவோம். ஆகவே தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு, அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

 

The post ஒன்றிய அரசு மருத்துவர்களுக்கு இணையாக மாநில அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்: அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: