அமித்ஷா மதுரை வருகை கூட்டணி கட்சிகளுக்கு பலம்: – ஜி.கே.வாசன் நம்பிக்கை

திருப்பூர்: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா வருகை அதிமுக, தமாகா கட்சிகளுக்கு பலம் சேர்க்கும் என ஜி.கே. வாசன் தெரிவித்தார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் வந்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நேரத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வருவது கட்சியினருக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுக்கும். இது பாஜவுக்கு மட்டுமல்ல அதிமுக, தமாகா உள்ளிட்ட ஒத்த கருத்துடைய கூட்டணி கட்சிகளுக்கு பலம் சேர்க்கும். தற்போது, தமிழகத்தில் அதிமுக, பாஜ, பாமக மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகள் வலுவான, பலமான கூட்டணியாக மக்களுடைய ஆதரவு பெற்ற கூட்டணியாக உள்ளது. தமிழகத்தில் உள்ள புதிய கட்சிகளாக இருந்தாலும் சரி, பழைய கட்சிகளாக இருந்தாலும் சரி இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது தமாகாவின் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.

The post அமித்ஷா மதுரை வருகை கூட்டணி கட்சிகளுக்கு பலம்: – ஜி.கே.வாசன் நம்பிக்கை appeared first on Dinakaran.

Related Stories: