இந்நிலையில் தான் தவறாக எதுவும் பேசவில்லை என்றும் அதனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார். இதையடுத்து படத்துக்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை நீக்கக் கோரி கமல்ஹாசன் தரப்பில் பெங்களூர் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் மற்றும் கமல் ரசிகர்கள் பலரும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில் அன்பு மன்னிப்பு கேட்காது என்றும் சத்தியம் தலை வணங்காது என்றும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post ‘மன்னிப்பு கேட்க முடியாது’ தமிழகம் முழுவதும் கமல்ஹாசன் ரசிகர்கள் போஸ்டர் appeared first on Dinakaran.