சென்னை, ஜூன் 3: கொரோனா பரவல் சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையி்ல, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதியவர்கள், இணைநோய் உள்ளவர்களிடம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறுவுறுத்தப்படுகிறது. இந்நிலையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை அதிகாரி கூறியதாவது: முன்னெச்சரிக்கை காரணமாக தற்போது வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 4 படுக்கை பெண்களுக்கும், 4 படுக்கை ஆண்களுக்கும் என மொத்தம் 8 படுக்கைகள் உள்ளது. சிகிச்சைக்கு தேவையான ஆக்ஸிஜன், முககவசம் உள்ளிட்ட அனைத்தும் வைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை யாரும் அனுமதிக்கப்பட இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
The post கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தனி வார்டு appeared first on Dinakaran.