சென்னை, ஜூன் 7: தமிழ்நாட்டில் பிஇ, பிடெக் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் படிவங்கள் பெறுவது நேற்றுடன் முடிவடைந்தது. 2 லட்சத்து 98 ஆயிரத்து 425 மாணவ மாணவியர் விண்ணப்பித்துள்ளனர் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். விண்ணப்ப பதிவு செய்த மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை 9ம் ேததிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். பிஆர்க் படிப்பிற்கான NATA நுழைவுத்தேர்வு ஜுன் இறுதி வாரம் வரை நடைபெற இருப்பதால் பிஆர்க் படிப்பிற்கான இணையதள விண்ணப்பப் பதிவு மற்றும் சான்றிதழ் பதிவேற்றங்களை இம்மாதம் 30ம் தேதி வரை மேற்கொள்ளலாம். பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையின் துணைக்கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி அறிவிக்கப்படும். மாணவர்களுக்கு ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின் 1800 425 0110 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
The post பி.இ., பிடெக் படிப்புகளுக்கு 2.98 லட்சம் பேர் விண்ணப்பம் appeared first on Dinakaran.