மாணவியிடம் அத்துமீறல் நேபாள வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி

 

அண்ணாநகர், மே 31: திருமங்கலம் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண், அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் நடந்து சென்றபோது, வாலிபர் ஒருவர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார்.

இதனால், அந்த பெண் அலறி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், அந்த வாலிபரை சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை மீட்டு விசாரித்தனர். அதில், நேபாள நாட்டை சேர்ந்த பிரதீப்குமார் (20) என்பது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.

The post மாணவியிடம் அத்துமீறல் நேபாள வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி appeared first on Dinakaran.

Related Stories: