சமையல் எரிவாயு இணைப்புகள் அதிகம் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்

டெல்லி : சமையல் எரிவாயு இணைப்புகள் அதிகம் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ்கிறது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு 14 கிலோ, 10. 5 கிலோ ஆகிய வகைகளில் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2025 மார்ச் வரை 1.06 லட்சம் எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டதாக இந்தியன் ஆயில் கார்பொரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே காலகட்டத்தில் கர்நாடகா மாநிலம் 60,000 எல்பிஜி இணைப்புகளை வழங்கி உள்ளது.

நாட்டிலேயே அதிகபட்ச இணைப்புகள் தமிழ்நாட்டில் தான் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. 60% இணைப்புகள் நகரப் பகுதிகளில் பெறப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1.34 லட்சம் இண்டேன் கேஸ் நுகர்வோர் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மாநிலத்தில் அதிக இணைப்புகள் பெறுவதில் சென்னை முன்னிலையிலும், கோவை , திருச்சி, மதுரை ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சமையல் எரிவாயு இணைப்புகள் அதிகம் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் appeared first on Dinakaran.

Related Stories: