தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் மூவர் உயிரிழப்பு..!!

தென்காசி: தென்காசி அருகே உள்ள சுந்தரபாண்டியபுரம் என்ற ஊரில் அன்னை முதியோர் இல்லம் என்ற முதியோர் இல்லத்தை செங்கோட்டையை சேர்ந்த ராஜதுரை என்பவர் நடத்தி வருகிறார். இங்கு சுமார் 60 முதியோர்கள் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் 95 சதவீதம் பேர் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் குன்றியவர்கள் இந்நிலையில் நேற்ற தினம் உணவு அருந்தியவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு அவர்கள் அடுத்தடுத்து வாந்தி மயக்கம் அடைந்ததால் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு செங்கோட்டையை சேர்ந்த சங்கர் என்பவர் உயிரிழந்தார். அவ்வப்போது அவரது உறவினர்கள் அவரது உடலை எடுத்து சென்றனர். இந்த நிலையில் இன்று காலை சொக்கம்படியை சேர்ந்த அம்பிகா மற்றும் முருகம்மாள் ஆகிய ஆதரவற்ற இரண்டு பெண்கள் தற்போது உயிரிழந்துள்ளனர். மேலும், தற்போது 8 பேர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவு அருந்தியதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதற்காக ஆய்வு மேற்கொள்ள உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவை பரிசோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர். தற்போது போலீசார் இது குறித்தான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் மூவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: