மழை, வெயில் என எந்த காலமாக இருந்தாலும் உணவு டெலிவரி வேலை படு பிசியாக நடைபெற்று வருகிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் ஸ்விக்கி, ஸ்மோட்டோ போன்ற உணவு டெலிவரி சேவை செய்யும் நிறுவனங்கள் பெருகிவிட்ட நிலையில், இந்த நிறுவனங்கள் 24 மணி நேர உணவு டெலிவரி சேவையை வழங்கி வருகின்றன. இப்படி பரபரப்பாக இயங்கும் இந்நிறுவனங்களில், உணவு டெலிவரி செய்யும் வேலையில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஊழியர்கள் மழை, வெயில் போன்ற கடினமான சூழல்களை கூட பொருட்படுத்தாமல், பணிபுரிகின்றனர்.
ஒதுங்குவதற்கு கூட சரியான இடம் இல்லாத நிலை உள்ளது. அதிலும் இந்த டெலிவரி ஊழியர்களில் 10 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள். அவசர தேவைகளுக்காக ஒதுங்க கூட முடியாத நிலை நீடிக்கிறது. கொளுத்தும் வெயிலிலும், மழையிலும் சாலையோரங்களில் ஒதுங்கி நிற்கும் நிலை உள்ளது. இந்த ஊழியர்களுக்கு குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை என்ற நிலை உள்ளது. இரவில் கூட பெண்கள் இருசக்கர வாகனத்தில் உணவு டெலிவரிம் செய்வதை தெருக்களில் காண முடியும். சில நாட்களுக்கு முன்டெல்லியில் ஆன்லைன் மூலம் உணவு டெலிவரிிக்கும் பணியாளர்களின் மாநாடு நடைபெற்றது. தற்போது தங்களுக்கு போதிய பணி பாதுகாப்பை உறுதிப்படுத்தி, தங்களுக்கும் பிற ஊழியர்களைப் போல வசதிகள் செய்து தரப்பட வேண்டும் ஆன்லைன் உணவு டெலிவரி பணியாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், இந்தியாவிலேயே முன்னோடியாக உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் பயன் பெறும் வகையில், தமிழகத்தில் முதல் முறையாக உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்காக இலவச ஏசி ஓய்வறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர சென்னை மாநகராட்சி முடிவு செய்திருந்தது. தற்போது இந்த திட்டம் இன்று முதல்பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சோதனை அடிப்படையில், ஏசி ஓய்வறை சென்னை அண்ணா நகரில் பயன்பாட்டிற்கு வந்துளளது.
என்னென்ன வசதிகள்?
இந்த ஓய்வறையானது 600 சதுரடி பரப்பளவில் அமையவுள்ளது. இதில், 20 அடி நீளம் 10 அடி அகலத்தில் கழிவறை, குடிநீர், செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் இருக்கும், 25 பேர் வரை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும், மேலும் 20 டூவிலர் வரை பார்க்கிங் செய்யும் முடியும். இங்கு ஓய்வெடுக்க கட்டணம் கிடையாது. கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டிருப்பதால் பாதுகாப்பிற்குப் பிரச்னையில்லை. குறிப்பாக, இது பெண்களுக்கும், இரவில் பணிபுரிபவர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும். முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் அண்ணாநகர், கே.கே.நகரில் திறக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தி.நகரில் இதுபோன்ற ஓய்வறைகள் அமைக்கப்பட உள்ளது.
The post இந்தியாவிற்கே முன்னோடியாக சென்னை அண்ணா நகரில் உணவு டெலிவரி ஊழியர்களுக்கு ஏ.சி. ஓய்வறை திறப்பு!! appeared first on Dinakaran.