சேலத்தில் திராவிட நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரலாறு காணாத வகையில் மக்கள் உற்சாக வரவேற்பு..!!

சேலம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சேலம் மாவட்ட எல்லையில் மக்கள் திரண்டு கோலாகலமாக வரவேற்றனர். சேலம் மாவட்டம் வரலாறு காணா வகையில் மாவட்ட எல்லையிலிருந்து 11 கிலோ மீட்டர் தூரம் சாலையின் இருபுறங்களிலும் மக்கள் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரம். மாலை 5.30 முதல் இரவு 10.30 மணி வரை வழிநெடுக மக்களை சந்தித்து மகிழ்ந்தார் திராவிட நாயகர். பெண்களும், இளைஞர்களும் வழிநெடுகிலும் செல்பி எடுத்து உற்சாகத்துடன் வாழ்த்து முழக்கங்கள் எழுப்பினர். இன்று மேட்டூர் அணையில் டெல்டா பாசன சாகுபடிக்காக தண்ணீரை திறந்து விட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஈரோடு, சேலம் மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். புதன் அன்று காலை விமானத்தின் மூலம் கோவை வழியாக ஈரோடு பயணம் மேற்கொண்டார். ஈரோடு மாவட்ட களஆய்வு பணியை முடித்து மாலையில் சேலம் வருகை தந்தபோது சேலம் மாவட்ட எல்லையான பெரும்பள்ளத்தில் மக்கள் திரண்டு முதலமைச்சர் அவர்களுக்கு பிரமண்டாமான முறையில் வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து 11 கிலோ மீட்டர் தூரம் சாலையின் இருபக்கங்களிலும் அலையென மக்கள் திரண்டு நின்றனர், மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடியே முதலமைச்சர் அவர்கள் உற்காகத்துடன் பயணம் சென்றார். முதலமைச்சர் அவர்களை கண்ட மக்கள் முதலமைச்சர் வாழ்க! முதலமைச்சர் வாழ்க! என வாழ்த்து முழக்கங்களை எழுப்பி முதலமைச்சர் அவர்களை வரவேற்றனர். வழி எங்கும் முதலமைச்சருடன் பெண்களும், இளைஞர்களும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

தொடர்ந்து மக்கள்
சாலையின் இரு புறமும் ஆண்கள், பெண்கள், சிறுவர்- சிறுமிகள் என ஏராளமானவர்கள் திரண்டு நின்றனர். அவர்களை கண்டதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காரில் இருந்து இறங்கி மக்களை சந்தித்தார். மக்கள் முதலமைச்சர் அவர்களுடன் கை குலுக்கியபடி முதலமைச்சர் வாழ்க! என வாழ்த்தி வரவேற்று மகிழ்ந்தனர்.

செல்பி எடுத்து மகிழ்ச்சி
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அவ்வப்போது மக்களுடன் மகிழ்ச்சி பொங்க உரையாடினார். மேலும், இளைஞர்கள், இளம்பெண்கள் முதலமைச்சருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பெண்கள் சிலர் கைக்குழந்தைகளுடன் நின்றதைப் பார்த்த முதலமைச்சர், அந்த பகுதிக்கு சென்று குழந்தைகளை வாங்கி கொஞ்சி மகிழ்ந்தார். பொதுமக்களுடன் வழிநெடுகிலும் கழகத் தொண்டர்கள் கொடுத்த மனுக்கள், புத்தகங்கள் பொன்னாடைகள் ஆகியவற்றையும் வாங்கியபடியே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடந்து சென்றார்கள்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பகுதியில் முதல்வர் அவர்களை கண்டதும் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

வழிநெடுக திரண்டிருந்த மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அற்புதமாக ஆட்சி செய்கிறார்கள். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் முதலான அருமையான திட்டங்களால் நாங்கள் முதலமைச்சர் அவர்களை மனதார பாராட்டுகிறோம் என்றனர். இதுவரை வேறு கட்சிக்கு வாக்களித்திருந்தாலும், முதலமைச்சர் அவர்களின் திட்டங்களால் பயனடைய கூடிய வாய்ப்பை பெற்றுள்ள நாங்கள் இனி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கே எங்களுடைய ஆதரவை அளிப்போம் என்று பெருமிதத்துடன் கூறிய காட்சிகளை கண்டு எல்லோரும் வியந்தனர்.

இன்று காலை தொடர்ந்து மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு முதலமைச்சர் அவர்கள் காவிரி ஆற்றில் தண்ணீரை திறந்து விட்டு மலர்தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். அப்பொழுது அங்கே நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் ஆகியோரும் மூத்த தலைவர்களும் அரசு அலுவலர்களும் பொதுமக்களும் திரண்டு இருந்தனர்.

திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டாம் ஆண்டு முதல் மேட்டூர் அணை பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு டெல்டா பகுதியில் சிறந்த முறையில் சாகுபடி பணிகள் நடைபெற்றன.
2021 ஆம் ஆண்டில் ஜுன் 12 ஆம் நாளன்றும் 2022 ஆம் ஆண்டில் வரலாற்றில் முதன்முறையாக முன் கூட்டியே மே 24 ஆம் நாளன்றும் 2023 ஆம் ஆண்டில் ஜுன் 12 ஆம் நாளன்றும் இந்த 2025 ஆம் ஆண்டிலும் ஜுன் 12 ஆம் நாளன்றும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post சேலத்தில் திராவிட நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரலாறு காணாத வகையில் மக்கள் உற்சாக வரவேற்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: