மெரினா கடற்கரையில் மேற்கொள்ளப்படும் மற்ற நடவடிக்கைகள் மூலம் இந்தக் கடற்கரைப் பகுதிக்கு அனைத்துலக அங்கீகாரம் கிடைப்பதுடன், சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மெரினா கடற்கரையில் புதிய நடைபாதை, சைக்கிள் வழித்தடங்கள், விளையாட்டுப் பகுதி, கண்காணிப்புக் கோபுரம், 360 டிகிரியில் சுழலும் கண்காணிப்புக் கேமரா, திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் ஆகிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மெரினா கடற்கரைகளில் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் செல்ல சிரமப்பட்டிருந்த நிலையில், மெரினா கடற்கரை பகுதிக்கு எளிதாக செல்லும் வகையில் பேட்டரி வாகன சேவையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (11.06.2025) தொடங்கி வைத்தார். அந்த வகையில், சென்னை மெரினாவில் நாளை முதல் மாற்றுத்திறனாளி, முதியோர் பயன்பாட்டுக்கு பேட்டரி வாகனங்கள் சேவை பயன்பாட்டிற்கு வருகிறது.
The post சென்னை மெரினாவில் நாளை முதல் மாற்றுத்திறனாளி, முதியோர் பயன்பாட்டுக்கு பேட்டரி வாகனங்கள் சேவை..!! appeared first on Dinakaran.