அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை: அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்பு

புதுடெல்லி: அமெரிக்க உடனான ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைக்கான அதிகாரிகள் குழுவை தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வழிநடத்துகிறார். அமெரிக்கா-இந்தியா இடையே இந்த ஆண்டு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை இறுதி செய்வதற்கு அது தொடர்பான சாத்தியக்கூறுகளை இரு நாடுகளும் ஆராய்ந்து அறியும் வகையில் வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. வாஷிங்டன்னில் நாளை மறுநாள்(16ம் தேதி) முதல் நான்கு நாட்களுக்கு இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது. இந்நிலையில் இதில் இந்தியா தரப்பில் கலந்து கொள்ளும் அதிகாரிகள் குழுவிற்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையேற்கிறார். இந்த பயணத்தின்போது அமைச்சர் கோயல், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் மற்றும் அமெரிக்க வர்த்தக துறை அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

The post அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை: அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: