காலை 9.30 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை இலுப்பூர் ஆர்டிஓ அக்பர் அலி கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைதொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். களத்தில் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக பல காளைகள் நின்று விளையாடியது.
காளைகளை அடக்கிய வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், பீரோ, கட்டில், மிக்சி, எவர்சில்வர் பாத்திரம் மற்றும் ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது. புதுக்கோட்டை டிஎஸ்பி அப்துல் ரகுமான் தலைமையில் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான மக்கள் கண்டு ரசித்தனர்.
The post புதுக்கோட்டை வடசேரிப்பட்டியில் ஜல்லிக்கட்டு; 700 காளைகள் சீறிப்பாய்ந்தன: 300 வீரர்கள் மல்லுக்கட்டு appeared first on Dinakaran.