சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 86.10% மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 206 தொடக்கப்பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

2024-25ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 81 சென்னை பள்ளிகளில் பயிலும் 7,142 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 3,113 மாணவர்கள் (83.93%) மற்றும் 3,036 மாணவியர் (88.44%) என மொத்தம் 6,149 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 86.10 ஆகும். இது சென்ற ஆண்டை விட 7 சதவீதம் கூடுதல் ஆகும்.

பாடவாரியான தேர்ச்சி விகிதத்தில் அறிவியல் பாடத்தில் 1 மாணவர், சமூக அறிவியல் பாடத்தில் 11 மாணவர்கள் என மொத்தம் 12 மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற பள்ளிகள்:
சைதாப்பேட்டை-சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 500 மதிப்பெண்களுக்கு 492 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், புத்தா தெரு-சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 500 மதிப்பெண்களுக்கு 491 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், சூளைமேடு-சென்னை மேல்நிலைப்பள்ளி 500 மதிப்பெண்களுக்கு 487 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும், சைதாப்பேட்டை-சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 500 மதிப்பெண்களுக்கு 486 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடத்தையும், காமராஜ் அவென்யூ-சென்னை உயர்நிலைப்பள்ளி 500 மதிப்பெண்களுக்கு 486 மதிப்பெண்கள் பெற்று ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன.

மதிப்பெண்கள் அடிப்படையில் 450 மதிப்பெண்களுக்கு மேல் 190 மாணவ, மாணவியர்களும், 400லிருந்து 449 வரை 653 மாணவ. மாணவியர்களும் பெற்றுள்ளனர். 350 மதிப்பெண்களுக்கு மேல் 1963 மாணவர்கள் பெற்றுள்ளனர். 100 சதவீத தேர்ச்சி – புரசை, ஜி. கோயில் தெரு-சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நுங்கம்பாக்கம்-சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காமராஜபுரம்-சென்னை உயர்நிலைப்பள்ளி, கொடுங்கையூர், காமராஜர் சாலை-சென்னை உயர்நிலைப்பள்ளி, கண்ணம்மாபேட்டை-சென்னை உயர்நிலைப்பள்ளி, பாடிக்குப்பம்-சென்னை உயர்நிலைப்பள்ளி, லாய்ட்ஸ் சாலை-சென்னை மேல்நிலைப்பள்ளி, குக்ஸ் சாலை-சென்னை உயர்நிலைப்பள்ளி, கீழ்ப்பாக்கம்-சென்னை உயர்நிலைப்பள்ளி, கே.பி.தெரு-சென்னை உயர்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு, மெக்நிக்கோலஸ் சாலை-சென்னை உயர்நிலைப்பள்ளி, ரங்கராஜபுரம்-சென்னை உயர்நிலைப்பள்ளி, வி.பி.கோயில் தெரு-சென்னை உயர்நிலைப்பள்ளி, சூளைமேடு-சென்னை மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 14 சென்னை பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

The post சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 86.10% மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: