கிருஷ்ணராயபுரம் அருகே அரசு பஸ் – பைக் மோதல்

கிருஷ்ணராயபுரம்; மே.13: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டை கொடிக்கால் தெருவை சேர்ந்த செந்தில்குமார் மகன் கோகுல் கார்த்திகேயன் (17), இவரது நண்பர் கரூர் குளத்துப்பாளையம் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் தார்ணிஸ் ஆக இருவரும் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் கோகுல் கார்த்திகேயன், உறவினர் திருமணத்திற்கு தேவையான பொருள்களை கரூரில் இருந்து வாங்கிக் கொண்டு தனது பைக்கில் தார்ணிசை பின்னால் அமர வைத்துக் கொண்டு ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது கிருஷ்ணராயபுரம் அருகே திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மகாதானபுரம் பகுதியில் எதிரே திருச்சியில் இருந்து கரூரைநோக்கி ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதி சேர்ந்த ரமேஷ் (55) என்பவர் ஓட்டி வந்த அரசு பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 சிறுவர்களும் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தார்னிஷ் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post கிருஷ்ணராயபுரம் அருகே அரசு பஸ் – பைக் மோதல் appeared first on Dinakaran.

Related Stories: