மாட்டுவண்டி பந்தயம் இருவர் மீது வழக்கு

 

பெரம்பூர்: சென்னை எம்கேபி நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அம்பேத்கர் கல்லூரி சிக்னல் அருகே நேற்று காலை 6 மணி அளவில் 2 பேர் தனித்தனியாக அதிவேகமாக மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக சென்றனர்.

அப்போது ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் அர்ஜூன், அதனை பார்த்து அவர்களை விரட்டிச் சென்று பிடித்து விசாரித்த போது இருவரும் மாதவரம் ரவுண்டானா பகுதியில் இருந்து வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி வரை, விதிமீறி மாட்டு வண்டி பந்தயத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் சென்ட்ரல் வால்டாக்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த திலீப் (19), அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

The post மாட்டுவண்டி பந்தயம் இருவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: