இந்த நிலையில், ஆயுதங்களை சுமந்து கொண்டு வந்த டிரோனை சுட்டு வீழ்த்திய காட்சியை வெளியிட்டு இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் இறையாண்மையை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எதிரிகளின் சதித் திட்டங்களை ராணுவம் முறியடிக்கும். பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ள காசா கான்ட் என்ற இடத்தில் இன்று காலை 5 மணியளவில் பாகிஸ்தானின் ட்ரோன் கண்டறியப்பட்டதும் உடனடியாக சுட்டு வீழ்த்திவிட்டோம்”இவ்வாறு தெரிவித்துள்ளது. எல்லையோர மாநிலங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவம் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமிர்தசரஸ் மக்களுக்கு அபாய ஒலி எச்சரிக்கை
“வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம், ஜன்னல் அருகே நிற்க வேண்டாம்’ என அமிர்தசரஸ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால் அபாய ஒலி எழுப்பி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post அமிர்தசரஸ் நோக்கி ஏவப்பட்ட ட்ரோன்கள் : எதிரிகளின் சதித் திட்டங்களை முறியடிப்போம் என இந்திய ராணுவம் உறுதி!! appeared first on Dinakaran.