தாராபுரத்தில் பள்ளத்தில் விழுந்து தம்பதி பலி: நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் மீது வழக்குப்பதிவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பள்ளத்தில் விழுந்து தம்பதி பலியான நிலையில் இது தொடர்பாக உதவி பொறியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தாராபுறம் பகுதியில் நேற்று முந்தினம் இரவு தம்பதி மற்றும் குழந்தையுடன் கோவிலுக்கு சென்று வீடு திரும்பும் பொழுது பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து தம்பதி உயிரிழந்தனர். மேலும் குழந்தைக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இது தொடர்பாக உறவினர்கள் நேற்று தாராபுரம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் தமிழக அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிதியும் ஒதுக்கி இருந்தது.

மேலும் இச்சம்பவம் குறித்து குன்னடம் போலீசார் வாக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கணேஷ், சைட் இன்ஜினியர் குணசேகரன், சைட் சூப்பர்வைசர் கெளதம், ஒப்பந்ததாரர் சிவகுமார் ஆகியோர் மீது அஜாக்கிரதையாக செயல்படுதல், விபத்து ஏற்படுத்தும் மரணம் ஏற்படுதல். உரிய பாதுகாப்பு தடுப்புகள் இல்லாமல் விபத்து ஏற்பட காரணமான சம்பவ இடத்தில் எந்த வித எச்சரிக்கை பலகையும் அமைக்காமல் விபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குன்னடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தாராபுரத்தில் பள்ளத்தில் விழுந்து தம்பதி பலி: நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: