இறுதிப் போட்டியில் இன்று சாகச சபலென்கா: சளைக்காத கோகோ காஃப்

மாட்ரிட்: ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் 6-1, 6-1 என நேர் செட்களில் போலந்து வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான இகா ஸ்வியடெக்கை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினார். தொடர்ந்து 2வது அரையிறுதி ஆட்டத்தில் பெலாரசின் அரீனா சபலன்கா 6-3, 7-5 என நேர் செட்களில் உக்ரைனின் எலனா ஸ்விடோலினாவை சாய்த்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

இந்திய நேரப்படி இன்று பிற்பகல் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் அரீனா சபலென்கா (26வயது, முதல் ரேங்க்), கோகோ காஃப் (21வயது, 4வது ரேங்க்) பலப்பரீட்சை நடத்துகின்றனர். தொடர்ந்து 3வது முறையாக ஹாட்ரிக் பைனில் விளையாடும் சபலென்காவுக்கு இது 4 இறுதி போட்டியாகும். அவற்றில் 2 முறை சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார். முன்னாள் சாம்பியனான சபலென்கா மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் களம் காண்கிறார்.

அதே நேரத்தில் முதல் முறையாக மாட்ரிட் ஓபன் இறுதி ஆட்டத்தில் விளையாடும் காஃப் ஏற்கனவே நடப்பு சாம்பியன் ஸ்வியடெக்கை வீழ்த்திய உற்சாகத்தில் களம் காணுகிறார். சபலென்காவும், காஃபும் ஏற்கனவே 2020 முதல் 9 சர்வதேச ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். அவற்றில் காஃப் 5 ஆட்டங்களிலும், சபலென்கா 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

The post இறுதிப் போட்டியில் இன்று சாகச சபலென்கா: சளைக்காத கோகோ காஃப் appeared first on Dinakaran.

Related Stories: