பாஜ கூட்டணியில் விஜய் கட்சி சேர்க்கப்படுமா?: நயினார் நாகேந்திரன் பேட்டி

சென்னை: தமிழ்நாடு பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: சாதிவாரி கணக்கெடுப்பை பொறுத்தமட்டில், தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே பலமுறை விவாதம் நடந்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சட்டமன்றத்திலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு எடுக்க வேண்டுமா? மாநிலங்களில் ஆளும் அரசு எடுக்க வேண்டுமா என்றும் வாதங்கள் நடந்தன. அதன் பின்பு மத்திய அரசுதான் அந்த கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அந்த அடிப்படையில் தற்போது மத்திய அமைச்சரவையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பாஜ கூட்டணியில் வேறு கட்சிகள் இணைகிறதா என்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. ஏனென்றால் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. அதேபோல் பாஜ தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு, விஜய் கட்சியை கொண்டு வருவது குறித்து, இப்போது எதுவும் கூற முடியாது. இன்னும் ஓராண்டு தேர்தலுக்கு இருப்பதால், அப்போது இதுகுறித்து பார்த்துக் கொள்ளலாம். விஜய் கட்சிக்கு மட்டுமல்ல, எல்லா எதிர்க்கட்சி நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி கொடுக்காமல் தமிழ்நாடு அரசு தடை விதிக்கிறது. இவ்வாறு கூறினார்.

 

The post பாஜ கூட்டணியில் விஜய் கட்சி சேர்க்கப்படுமா?: நயினார் நாகேந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: