பாகிஸ்தானில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஐஎஸ்ஐ தலைவர் முகமது ஆசிம் நியமனம்

இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் பாகிஸ்தானில் ஐஎஸ்ஐ தலைவர் முகமது ஆசிம் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தானின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான உளவுத்துறை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் முகமது ஆசிம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆண்டு அக்டோபரில் ஐஎஸ்ஐ இயக்குனர் ஜெனராக நியமிக்கப்பட்டவர்.

இது குறித்து பாகிஸ்தான் கேபினெட் வெளியிட்ட அறிக்கையில், ஜெனரல் மாலிக்கிற்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பணி முறையாக வழங்கப்பட்டுள்ளது. லெப்டினன்ட் ஜெனரல் முகமது ஆசிம் மாலிக் நியமனம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூடுதல் பொறுப்பை வகிப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐ தலைவருக்கு ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய பணி வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

 

The post பாகிஸ்தானில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஐஎஸ்ஐ தலைவர் முகமது ஆசிம் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: