பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் ஒரே மேடையில் 2 காதலியை மணந்த காதலன்: இணையத்தில் வீடியோ வைரல்


திருமலை: தெலங்கானா மாநிலம், குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம், ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரம்பாபாய்- பத்ருஷாவ் தம்பதி. இவர்களது 2வது மகன் அத்ரம் சத்ருஷாவ். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஜங்குபாய் என்ற பெண்ணை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். அதேசமயம், அத்ரம் சத்ருஷாவ் கெரமேரி மண்டலத்தில் உள்ள சங்கி கிராமத்தைச் சேர்ந்த உறவினரான சன் தேவி என்ற இளம் பெண்ணையும் ஒரு வருடமாக காதலித்துள்ளார். இதற்கிடையில், அத்ரம் சத்ருஷாவ்வுக்கும், சன் தேவிக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது.

இதனை அறிந்த முதல் காதலி ஜங்குபாய் தன்னையும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தினார். அதனடிப்படையில், இரண்டு காதலிகளையும் பெரியவர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் அத்ரம் சத்ருஷாவ் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார். அதன்படி, திருமண பத்திரிக்கை அச்சிடப்பட்டு உறவினர்கள், பெற்றோர்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் திருமணம் தடபுடலாக நடைபெற்றது. திருமணத்திற்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மணமக்களை வாழ்த்தி சென்றனர். இந்நிலையில், சமீபத்தில் அதேபகுதியில் ஒரு இளைஞர் 2 இளம் பெண்களை மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமணம் சமூக ஊடகங்களிலும் வைரலாகியது.

The post பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் ஒரே மேடையில் 2 காதலியை மணந்த காதலன்: இணையத்தில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: