இந்தியப் பாதுகாப்புப் படை கடந்த புதன்கிழமை காலை பாகிஸ்தானில் அதிரடியாகத் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை இந்தியா அழித்தது. அதில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆபரேஷன் சிந்தூர வெற்றியைப் பொறுக்காத பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியா மீது அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. பாக். தாக்குதல்களை முறியடித்த இந்தியா அதற்குச் சரியான பதிலடியைக் கொடுத்தது. இந்தியாவின் பதிலடியைத் தாங்க முடியாத பாகிஸ்தான் மோதல் வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்ததால் இந்தியா அதை ஏற்றுக்கொண்டு மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தது.
இதற்கிடையே ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என்று விமானப்படை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்திய விமானப்படை (IAF) ஆபரேஷன் சிந்தூரில் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும், தொழில்முறையுடனும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
சரிபார்க்கப்படாத தகவல்களை ஊகிப்பதையும் பரப்புவதையும் தவிர்க்குமாறு இந்திய விமானப்படை வேண்டுகோள் விடுத்துள்ளது. தேசிய நோக்கங்களுடன் இணைந்து, வேண்டுமென்றே மற்றும் விவேகமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. செயல்பாடுகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதால், சரியான நேரத்தில் விரிவான விளக்கவுரை நடத்தப்படும். சரிபார்க்கப்படாத தகவல்களை ஊகிப்பதையும் பரப்புவதையும் தவிர்க்குமாறு IAF அனைவரையும் கேட்டுக்கொள்கிறது.
The post ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை : இந்திய விமானப்படை appeared first on Dinakaran.