அவர்கள் ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த அடில் ஹுசைன் தோகர், ஆசிப் ஷேக் என்பது அடையாளம் காணப்பட்டது. மேலும் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 20 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்று ஜம்மு – காஷ்மீர் காவல்துறையினர் அறிவித்தனர். இந்நிலையில், அனந்த்நாக் மாவட்டம் பிஜ்பெஹாராவில் உள்ள அடில் ஹுசைன் தோகர் மற்றும் புல்வாமா மாவட்டம் டிராலில் உள்ள ஆஷிப் ஷேக்கின் வீடுகளில் நேற்றிரவு இந்திய ராணுவத்தினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் இருவரின் வீட்டையும் இந்திய ராணுவத்தினர் வெடிகுண்டு வைத்து தகர்த்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பந்திபோராவில் நடைபெற்ற தேடுதல் பணியின்போது லஷ்கர் – இ – தொய்பா அமைப்பின் தளபதிகளில் ஒருவரான அல்தாஃப் லல்லியை ராணுவ வீரர்கள் இன்று காலை சுட்டுக் கொன்றனர். மேலும், ஜம்மு – காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடைபெறும் நிலையில், எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்துடன் இந்திய வீரர்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post லஷ்கர் தளபதி சுட்டுக்கொலை: 2 தீவிரவாதிகள் வீடுகள் தகர்ப்பு appeared first on Dinakaran.