இந்த கொடூர தாக்குதலுக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட லஷ்கர் ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபரண்ட் பொறுப்பேற்றுள்ளது. பயங்கரவாதிகள் ஜம்முவின் கிஷ்த்வாரில் எல்லை கடந்து கோகர்நாத் வழியாக பைசாரனுக்கு வந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வெளியிட்ட அறிக்கையில்;
தாக்குதல் குறித்துச் செய்தியறிந்து நம்பமுடியாத அளவுக்கு அதிர்ச்சியடைந்தேன். சுற்றுலாப் பயணிகள் மீதான இத்தாக்குதல் அருவருப்பானது. பெஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி அளிக்கப்படும். படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.2 லட்சம், காயம் அடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பின்னணில் உள்ளவர்களை நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
The post காஷ்மீர் தாக்குதலில் இறந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்: ஜம்மு – காஷ்மீர் அரசு அறிவிப்பு!! appeared first on Dinakaran.