கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே கைத்துப்பாக்கி கிடப்பதாக மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று பெட்ரோல் பங்க் பின்புறம் கிடந்த கைத்துப்பாக்கியை மீட்டனர். பிஸ்டல் 0.32 எம்.எம்., 7.65 வகையை சேர்ந்த இந்த துப்பாக்கி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். யாரும் இதுவரை அந்த துப்பாக்கிக்கு உரிமை கோரவில்லை. சட்டவிரோத செயலில் ஈடுபட யாரேனும் பதுக்கி வைத்திருந்தனரா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post பெட்ரோல் பங்க் அருகே கிடந்த கைத்துப்பாக்கி appeared first on Dinakaran.