சுக்மா: சட்டீஸ்கரில் நக்சல் அபாயம் இல்லாத கிராமங்களுக்கு செல்போன் இணைப்பு, மின்சார இணைப்பு மற்றும் ரூ.1 கோடி வளர்ச்சி நிதி ஒதுக்கப்படும் என சட்டீஸ்கர் அரசு அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் சட்டீஸ்கரின் படேசட்டி கிராம பஞ்சாயத்து நக்சல் பாதிப்பில்லாத முதல் கிராம பஞ்சாயத்தாக படேசட்டி மாறி உள்ளது. சுக்மா மாவட்ட தலைமையகத்தில் இருந்து சுமார் 45 கிமீ தொலைவில் உள்ள புல்பாகி காவல்நிலைய எல்லைக்குள்பட்ட படேசட்டி இடதுசாரி தீவிரவாதத்துக்கு பெயர் பெற்றது. படேசட்டி கிராமத்தில் 11 நக்சல்கள் நேற்று முன்தினம் சரணடைந்தனர்.
சட்டீஸ்கரில் நக்சல்கள் சரணடைதல், பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு கொள்கை-2025ன் ஒருபகுதியாக எல்விட் பஞ்சாயத்து யோஜனா திட்டம் நக்சல்கள் சரணடைய வழிவகுத்தது. சரணடைந்த அனைத்து நக்சலைட்டுகளுக்கும் தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும் அவர்கள் மறுவாழ்வு பெறுவதற்கான முயற்சிகளும் தொடங்கி உள்ளன. இதையடுத்து படேசட்டி கிராம பஞ்சாயத்து நக்சல் அச்சுறுத்தலில் இருந்து விடுபட்டு, அரசாங்கத்தின் புதிய திட்டத்தின் பலன்களை பெற தகுதியுடைய பகுதியாக மாறி உள்ளது.
The post எல்விட் பஞ்சாயத்து யோஜனா திட்டம்: சட்டீஸ்கரில் நக்சல் இல்லாத முதல் கிராம பஞ்சாயத்து appeared first on Dinakaran.