ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் நடிகையை அலேக்காக தூக்கிய பவுன்சர்: பாலிவுட்டில் பரபரப்பு

மும்பை: விழாவில் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் நடிகை பாலக் திவாரியை அவரது பவுன்சர் ஒருவர் அலேக்காக தூக்கிக் கொண்டு மேடையில் கொண்டு போய் விட்ட சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் திகில் மற்றும் நகைச்சுவை திரைப்படமான ‘தி பூத்னி’-யின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஸ்டைல் போஸ் கொடுத்துக் கொண்டு பாலிவுட் நடிகை பாலக் திவாரி வந்தார். விழா நடைபெறும் இடத்திற்கு சிறிது தொலைவுக்கு முன்பாக தனது காரில் பாலக் திவாரி வந்திறங்கியபோது, அவரை பெரும் ரசிகர் கூட்டம் சூழ்ந்து கொண்டது.

ரசிகர்களின் உற்சாகம் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக, அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால், அவரது பாதுகாப்பு குழுவை (பவுன்சர்கள்) சேர்ந்த ஒருவர், பாலக் திவாரியை காரில் இருந்து அலேக்காக தூக்கிக் கொண்டார். பின்னர் பவுன்சர்கள் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கூட்டத்தைத் தாண்டி நிகழ்ச்சி நடைபெறும் மேடைக்கு பாலக் திவாரியை தூக்கியவாறே கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேடையில் இறக்கிவிட்டனர். இந்தக் காட்சி, அங்கிருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்த வீடியோவில், பாலக் திவாரி பளபளப்பான கருப்பு உடையில், தனது பாதுகாப்பு குழுவை சேர்ந்த ஒருவரின் தோளில் தூக்கப்பட்ட நிலையில், அவரது ரசிகர்களின் கூட்டத்தைத் தாண்டி செல்வது பதிவாகியுள்ளது. தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பாலக் திவாரி, ‘நான் இந்த மேடைக்கு வருவதற்கு முன் இவ்வளவு நாடகம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால், ரசிகர்களின் அன்பு மற்றும் ஆரவாரத்திற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நடந்த நிகழ்ச்சி எனக்கு மறக்க முடியாத தருணத்தை ஏற்படுத்தி உள்ளது’ என்று கூறினார்.

The post ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் நடிகையை அலேக்காக தூக்கிய பவுன்சர்: பாலிவுட்டில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: