9வது முறையாக பிஜேடி தலைவரானார் பட்நாயக்


புவனேஷ்வர்: பிஜூ ஜனதா தளத்தின் நிறுவனத் தேர்தல் நேற்று நடைபெற்றது. தலைவர் பதவிக்கு கட்சியின் ஒரே வேட்பாளராக நவீன் பட்நாயக் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார். புவனேஸ்வரில் உள்ள கட்சியின் மாநில தலைமையகமான சங்கா பவனில் நடந்த தேர்தலில் தொடர்ந்து 9வது முறையாக பிஜூ ஜனதா தளத்தின் தலைவராக நவீன் பட்நாயக் தேர்வு செய்யப்பட்டார்.

தேர்தல் அதிகாரி பி.கே. தேப் பட்நாயக் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை அறிவித்தார். மேலும் கட்சியின் மாநில கவுன்சிலில் 355 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 80 பேர் மாநில நிர்வாக உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

The post 9வது முறையாக பிஜேடி தலைவரானார் பட்நாயக் appeared first on Dinakaran.

Related Stories: