அதன்படி வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் பல்கலைக்கழக வளாகம் மற்றும் மாணவ, மாணவிகள் விடுதிகள் என அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. இதையடுத்து, இது வெறும் புரளி என தெரியவந்தது. அதைதொடர்ந்து கோட்டூர்புரம் போலீசார் மிரட்டல் வந்த மின்னஞ்சல் முகவரியை பெற்று ஆய்வு செய்த போது, அது வெளிநாடுகளில் இருந்து வந்தது என தெரியவந்தது. அதைதொட்ர்ந்து போலீசார் சைபர் க்ரைம் உதவியுடன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
The post அண்ணா பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.