கூடுதல் வரி விதிப்பை டிரம்ப் நிறுத்தியதால் அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து 40,000 டன் இறால் ஏற்றுமதி

டெல்லி: கூடுதல் வரி விதிப்பை டிரம்ப் நிறுத்தியதால் அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து 40,000 டன் இறால் ஏற்றுமதியாக உள்ளது. டிரம்ப் வரி விதிப்பு அறிவித்த பின் இம்மாத தொடக்கத்தில் இருந்து தற்போது வரை முதலீட்டாளர்களுக்கு ரூ.11.30 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. டிரம்ப் கூடுதல் வரிடை 90 நாட்களுக்கு தற்போது நிறுத்தி வைத்த நிலையிலும் சென்செக்ஸ் இதுவரை 2% வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்ட 26 சதவீத பரஸ்பர வரியை இடைநிறுத்தி, வரியை 10 சதவீதமாகக் குறைத்த பிறகு, இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் 35,000-40,000 டன் இறால்களை அமெரிக்காவிற்கு அனுப்பத் தயாராகி வருகின்றனர். ஆர்டர்கள் நிலையானதாகவே உள்ளன என்று தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் மற்ற ஏற்றுமதியாளர்களுடன் இணையாக இருப்பதால் இப்போது நிறைய நிவாரணம் கிடைத்துள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏற்றுமதிகள் இப்போது செயல்படுத்தப்படும்,” என்று இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.என். ராகவன் பிடிஐயிடம் தெரிவித்தார். ஏப்ரல் 2 ஆம் தேதி அதிக வரிகளை அறிவித்த ஒரு வாரத்திற்குப் பிறகு, ஏப்ரல் 9 ஆம் தேதி டிரம்ப் அதிக வரிகளை இடைநிறுத்த முடிவு செய்ததைத் தொடர்ந்து, தாமதமாக வந்த சுமார் 2,000 இறால் கொள்கலன்கள் இப்போது ஏற்றுமதிக்குத் தயாராக உள்ளன என்று அவர் கூறினார்.

The post கூடுதல் வரி விதிப்பை டிரம்ப் நிறுத்தியதால் அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து 40,000 டன் இறால் ஏற்றுமதி appeared first on Dinakaran.

Related Stories: