கார் மோதி சிறுவன், சிறுமி பரிதாப பலி

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சொர்ணராஜன் மகள் சண்முகப்பிரியா(13), குகன் மகன் ஹரி சூர்யா பிரகாஷ்(14). இருவரும் 8ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள், நேற்று முன்தினம் இரவு சாயல்குடி பத்திரகாளியம்மன் கோயில் திருவிழா சப்பர ஊர்வலத்தில் பெற்றோருடன் சென்று தரிசனம் செய்தனர்.

பின்னர் நள்ளிரவில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது சாயல்குடி காவல் நிலையம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்ற அவர்கள் மீது ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி சென்ற கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சண்முகப்பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ஹரி சூரியபிரகாஷ், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று இறந்தார்.

The post கார் மோதி சிறுவன், சிறுமி பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: