ஆர்.எஸ்.எஸ். கொபசெவாக கவர்னர் செயல்படுகிறார்: துரை வைகோ எம்பி குற்றச்சாட்டு

திருச்சி: அம்பேத்கரின் 135வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி அரிஸ்டோ பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மதிமுக சார்பில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கடந்த நான்கு வருடங்களாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பாட்டால் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. ஆளுநர் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு மாநில மக்களுக்கு பொதுவான நபராக இருக்க வேண்டும்.

மாநில அரசுக்கு உதவியாக இருக்க வேண்டும். கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆனால் ஆர்.என்.ரவி முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ் கொள்கை பரப்பு செயலாளர் போல் செயல்படுகிறார். தமிழக முதல்வர் மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அதன் மூலம் மீண்டும் மக்கள் வாக்களிப்பார்கள். நாங்கள் வலிமையான கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணியில் எந்தவித குழப்பத்தையும் ஏற்படுத்தாத வகையில் எங்கள் செயல்பாடு இருக்கும். ராமதாசின் அரசியல் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது. அதை அன்புமணி புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

The post ஆர்.எஸ்.எஸ். கொபசெவாக கவர்னர் செயல்படுகிறார்: துரை வைகோ எம்பி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: